• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெருமை மிக்க அன்னை தெரசா அவர்களின் 115-ஆவது பிறந்தநாள்

பெருமை மிக்க அன்னை தெரசா அவர்களின் 115-ஆவது பிறந்தநாள் . 26.08.2026
கோவை பாரதியார் பல்கலைக்கழத்தையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தையும் 1982-ல் உருவாக்கிக் கொடுத்த #புரட்சித்தலைவர்....
"பெண் உயர் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிருக்கு மட்டுமேயான ஒரு தனித்த பல்கலைக்கழகத்தை அதிமுக அரசு உருவாக்கித்தரும்" என அறிவித்தார்.
அதன்படியே கொடைக்கானலில் மகளிர் பல்கலைக்கழகம் அமைக்க முடிவெடுத்தார்.
'1984ல் கொடைக்கானலில் மகளிர் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்' என அறிவிக்கப்பட்டு அரசு விருந்தினர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டனர். காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, அன்னை தெரசா உள்ளிட்ட பலரும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
விழா ஆரம்பமானது. விழாவில் பேசிய பலரும் மகளிர் பல்கலைக்கழகத்திற்கு சூட்ட ஆளுக்கொரு பெயரை பரிந்துரை செய்தனர். 'தமிழ் பெண் புலவர்களின் பெயர்கள்' என சிலர் சொல் 
'ஔவையார் பெயர் வைக்கலாமே' என சிலர் சொல்ல ..
 சுதந்திரத்திற்காக போராடிய 'தில்லையாடி வள்ளியம்மை பெயரை வையுங்கள்' என வேறு சிலர் சொல்ல... இன்னும் சிலர் தலைவரின் தாயார் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.
எல்லாவற்றையும் மறுத்த பின் மைக்கை பிடித்த #மக்கள்திலகம்
"அன்னை தெரசா!'
'அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்"
-என அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்..!
அருகில் இருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.
பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா எழுந்து வந்து புரட்சித்தலைவரை இறுகத் தழுவிக் கொண்டார்.
இந்து மதத்தைச் சேர்ந்த புரட்சித்தலைவர், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட , இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா அவர்கள் பொன்மனச்செம்மலை அன்போடு தழுவி நிற்க உதயமானதுதான் 'கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்'

அதுதான் #புரட்சித்தலைவர்..
 

Leave a Reply