தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா
இலங்கை
வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது.
கடந்த 15ஆம் திகதி கொடியற்றத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெற்று , இன்றைய தினம் காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது.
தேர் திருவிழாவின் போது , ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டதுடன் , காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும், பிரதட்டை அடித்தும் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர் .
நாளைய தினம் காலை 8.30 மணிக்கு தீர்த்த திருவிழா நடைபெற்று , மாலை 06 மணிக்கு கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.






















