நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பொதுமக்கள் 60 பேரை கடத்திய பயங்கரவாதிகள்
நைஜீரியாவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நைஜீரியாவின் நைஜர் மாகாணம் டிகாரா மாவட்டம் கெபன்யா கிராமத்திற்குள் நேற்று முன் தினம் மதியம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் கிராமத்தினர் 60 பேரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
இதில் பெரும்பாலானோர் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்கள் ஆவார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபடு வருகின்றனர்.
கிராமத்தினரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள் யார்? என்பது குறித்தும் மீட்பு, தேடுதல் வேட்டையிலும் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.






















