• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடோடி தலைவர் மன்னன் ஆனார்,... திரையிடப்பட்ட அவ்வளவு அரங்குகளிலும் மக்கள் வெள்ளம்...

சினிமா

வரலாற்று படம் நாடோடி மன்னன் படத்தை முழு முதலீடு செய்து அதுவும் போதாமல் கடன் வாங்கி படத்தை உருவாக்கி கொண்டு இருந்த நேரம்.
பெரியவர் இந்த விபரீத விளையாட்டு எங்கே போய் முடியுமோ என்று கவலைப்பட்டார்.
ஒரு நாள் பட பிடிப்பு முடிந்த பின் மறுநாள் எடுக்க பட வேண்டிய காட்சிகள் குறித்து அரங்கில் இருந்தவர்களுக்கு குறிப்பு சொல்லிவிட்டு இல்லம் திரும்பினார்  வீராங்கன்...
மறுநாள் காட்சிக்கு இரவில் சாப்பிட்டு விட்டு ட்ராலி வண்டியில் ஒரு கணம் மிகுந்த விலை உயர்ந்த கேமராவை 4 பேர் தள்ளி கொண்டு போய் தலைவர் சொன்ன காட்சிக்கு ஏற்ப அந்த இடத்தில் படம் எடுக்க நிற்க வைக்க..
இடம் அருகில் வந்த போது ட்ராலி நழுவி பிடி பிடி என்று கத்த விலை உயர்ந்த அந்த கேமரா சுப்ரமணியன் என்ற அந்த நபர் பிடியை தாண்டி தரையில் விழுந்து லென்ஸ் நொறுங்கி போனது...
இரவு முழுவதும் அந்த நால்வருக்கும் தூக்கம் தொலைந்து போனது.
சொன்னபடி காலையில் சின்னவர் வந்து விட்டு என்ன சொல்லி விரட்ட போகிறார் என்ற பயம்.
பொழுதும் விடிய புன்னகை ததும்பிய முகத்துடன் அன்று பூத்த மலர் போல வந்தார் சின்னவர்..
அரங்கில் நுழைந்த உடன் இருக்கும் நிலையை சுற்றி பார்க்க பயந்து பயந்து  தள மேலாளர் கேமரா உடைந்த விஷயம் சொல்ல...
முகம் மாறி சிவந்த தலைவர் யார் அந்த நால்வர் என்று கேட்க நடுங்கிய படி அவர்கள் வர அதில் ஒருவர் ஐயா நாங்கள் வழுக்கும் போது பிடிக்க சொன்னோம் அவர் தான் விட்டு விட்டார் என்று பழியை  சுப்ரமணியன்  மேலே போட...
நடுங்கிய படி அவர் அண்ணே என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி பதறி தலைவர் காலை நோக்கி அவர் குனிய..
என்ன இப்படி ஐயா உங்கள் வயது என்ன நீங்க போய் இப்படி..
என்னிடம் வேறு ஒரு காமெரா இருக்கு அதை வைத்து இன்று காட்சிகள் எடுப்போம்.
என்று சொல்லி திரும்பி தரை மேலாளர் பக்கம் திரும்பி அவர் வயது என்ன ஆச்சு....இது போன்ற கடின வேலைக்கு அவரை ஏன் கூட வைத்து கொள்ள.
வேறு வேலை அவருக்கு ஒதுக்கி இனி வயது குறைந்த ஒருவரை அந்த பணிக்கு வையுங்க என்று சொல்லி அப்பிடியே அந்த வயது முதிர்ந்த சுப்ரமணியன் அருகில் வந்து அவர் முதுகில் செல்லமாய் தட்டி ஐயா பயம் வேண்டாம்...நானும் மனுஷன் தான் என்கிறார்...
அவர் நடந்து சென்ற வழியை பார்த்து அந்த சுப்ரமணியன் நீங்க மனுஷன் இல்லையா தெய்வம் என்று மனதுக்குள் சொல்லி கொள்கிறார்.
வாழ்க தலைவர் புகழ்.
வாழ்க மனித நேயம்.
நன்றி.....தொடரும்.
உங்களில் ஒருவன்.
நெல்லை மணி..
பின் குறிப்பு...
தலைவர் இந்த படம் துவக்கிய பின் பல தடைகள்.
கதாநாயகி பானுமதி பாதியில் ஓடி...
அறிவிக்க பட்ட இயக்குனர் அவரும் விலகி  சென்சார் பிரசனை வேறு....
அப்போ பலம் மிகுந்த காங்கிரஸ் அரசை மீறி 
தான் சார்ந்த இயக்கம் 
திமுக கொடிய படத்தின் ஆரம்ப காட்சியில் வைத்த கொள்கை பிடிப்பு...
கருப்பு வெள்ளை  படம் அதை கோவா கலரில் மாத்தி 
தலைவர் அண்ணன் சக்கிர 
பாணி  வெறுத்து போய் 
வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி கொண்டே சொன்னார் நடு தெரு நிச்சியம் என்று...
தமிழ் திரை உலகில் அதிகம் நாட்கள் வருடங்கள் படம் ஆக்க பட்ட ஒரே படம்...
வென்றால் மன்னன் இல்லயென்றால் நாடோடி 
என்று  துணிந்து சொன்னார் 
மன்னன்....

நாடோடி தலைவர் மன்னன் ஆனார்,... திரைஇட பட்ட அவ்வளவு அரங்குகளிலும் மக்கள் வெள்ளம்...
தமிழக திரை வரலாறு அதில் படம் ஒரு நகரில் ஓடி முடிந்து அதே திருவண்ணாமலை நகரில் முதலில் பின்னர் அடுத்த வெளியீடு அதிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே தமிழ் படம்....

 

Nellaimani Admk

Leave a Reply