• Welcome to TamilsGuide
செய்திகள் 1

20 ஆண்டுகளுக்கு பிறகு பாலஸ்தீனத்தில் நடைபெறவுள்ள தேர்தல்

பாலஸ்தீனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 28 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா உள்ளிட்ட அனைத்து பாலஸ்தீனியப் பகுதிகளிலும் தேர்தல் நடத்தப்படும் என பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் அரசியல் சீர்திருத்த அழுத்தங்களுக்கு மத்தியிலும், காசாவில் ஹமாஸ் அமைப்பு தனது சிவில் நிர்வாகத்தைக் கலைத்துவிட்டு நிபுணர்கள் குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைத்ததைத் தொடர்ந்தும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனத்தில் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாரா வகையில் ஹமாஸ் அமைப்பு வெற்றிப்பெற்றது. இதன் விளைவாக 2007-ல் காசாவில் கட்டுப்பாட்டை கையிலெடுத்தது ஹமாஸ்.

பாலஸ்தீனத்தின் அறிவிப்பு வெளிவந்தாலும், இஸ்ரேல் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனியர்கள் வாக்களிக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

ஒப்பந்தத்தின் பின்னணி காரணம் இதற்கு முன்பும் 2021ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டநிலையில், இஸ்ரேல் உத்தரவாதம் அளிக்காததால், ரத்து செய்யப்பட்டன.
 

Leave a Reply