• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதனால் தான் அவர் நடிகர் திலகம் என்கிறார்கள்...

சினிமா

1968 ல் வெளி வந்த படம் சிவாஜி நடித்த எங்க ஊர் ராஜா. இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள  ஸ்டூடியோ ஒன்றில் நடந்தது. 

தனது காட்சிகள் எடுத்து முடிந்த பிறகு ஓய்வு நேரத்தில் தனது நண்பர்களுடன் நம்பியார் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது சிவாஜி கணேசன் மேக்கப் அறைக்கு சென்ற நேரத்தில் நம்பியாரை பார்த்து பவ்யமாக வணக்கம் சொன்னார்.

ஒரு மணி நேரம் கழித்து ஜமீன்தார் வேடத்தில் சிவாஜி வெளியே வந்தார். அப்போது நம்பியாரை ஒரு கர்வமாக பார்த்தபடி படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுள்ளார். 

இதை பார்த்த நம்பியாரின் நண்பர்கள்  " பார்த்தீர்களா அண்ணே... வரும்போது சிவாஜி உங்களை பார்த்து பவ்யமாக வணக்கம் சொன்னார். இப்போது கர்வமாக பார்த்து விட்டு போகிறாரே" என்றனர்.

அதற்கு நம்பியார் " அவர் வரும்போது சாதாரண கணேசனாக வந்தார். இப்போது மேக்கப் போட்டவுடன் படத்தின் கதை படி , ஜமீனாக மாறி விட்டார். அதனால் தான் அவர் நடிகர் திலகம் என்கிறார்கள்" என்று  சொல்ல நண்பர்கள் அமைதியாகி விட்டனர். 

Prashantha Kumar

Leave a Reply