• Welcome to TamilsGuide
செய்திகள் 1

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை

இலங்கை

2025 முதல் 2029 ஆம் ஆண்டுக்குள் தாதியர் சேவையில் 13,600 பணியாளர்களைச் சேர்க்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

2021, 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், மே 29 முதல் ஜூன் 30 வரை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.health.gov.lk மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தற்போதைய சுகாதாரத் துறை தரவுகளின்படி, இலங்கையின் அரச சுகாதார அமைப்பில் 43,553 தாதியர்கள் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். 

சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், சுகாதார அமைச்சு கடந்த இரண்டு ஆண்டுகளில் 3,441 மூன்றாம் நிலை தாதியர் பணியாளர்களை நியமித்துள்ளது.

மேலும், அது அண்மையில் 515 பி.எஸ்சி. தாதியர் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள தாதியர் கல்லூரிகளில் தற்போது சுமார் 7,800 தாதியர் மாணவர்கள் தொழில்முறைப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

2025 முதல் 2029 வரை 13,600 தாதியர் பணியாளர்களை நியமிக்கும் திட்டமிடப்பட்ட பணியானது, சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply