கனடாத் தமிழ் மரபியல் நடுவத்தின் தமிழ் மரபுத்திங்கள் 2025 ற்கான கொடியேற்ற நிகழ்வு
கனடா
கனடாத் தமிழ் மரபியல் நடுவத்தின் தமிழ் மரபுத்திங்கள் 2025 ற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று ( 01-01-2025 ) புதன்கிழமை காலை 11 மணிக்கு Scarborough வில் அமைந்துள்ள கனடா தமிழ்க் கல்லூரிப் பணிமனை முன்றலில் நடைபெற்றது.
நிகழ்வில் கனடாத் தேசியக் கொடியை N.C.C.T இன் இணைப்பாளர் ருக்சா சிவநாதன் அவர்களும், கனடாத் தமிழ் மரபியல் நடுவக் கொடியை கனடாத் தமிழ்க் கல்லூரியின் ஆசிரியரும் அறிவகத்தின் கல்விப் பொறுப்பாளருமான கா.யோ.கிரிதரன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.
தமிழ் மரபுத் திங்கள் ஆரம்ப நாள் நிகழ்வுகள் எதிர்வரும் சனவரி 4, 2025 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு Vellore Village Community Centre (1, Village Royale Ave. Woodbridge Ontario L4H 2Z7 முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும். அன்று 2025 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளான "அறிவியல் தமிழ்" க்கான பதாகை வெளியீடும், ஆரம்ப நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
அனைவரும் அன்போடு நிகழ்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

































