• Welcome to TamilsGuide
செய்திகள் 1

179 பேரை பலி வாங்கிய விமான விபத்து - ஒரே நாளில் பயணத்தை ரத்துசெய்த 68,000 பயணிகள்

தாய்லாந்திலிருந்து 181 பேரை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.

தலைநகர் சியோலில் இருந்து தென்மேற்கே சுமார் 288 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அடிப்பகுதி ஓடுபாதையில் உரச தரையிறங்கிய விமானத்தின் என்ஜின்களில் இருந்து புகை கிளம்பியது. ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்தது. இதில் 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமான விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஒரே நாளில் விமான விபத்தில் சிக்கிய ஜெஜு விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த சுமார் 68 ஆயிரம் பேர் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

இதில் 33 ஆயிரம் பேர் உள்ளூர் பயணங்களையும், 34 ஆயிரம் பேர் வெளிநாட்டு பயணங்களையும் ரத்து செய்துள்ளனர் என ஜெஜு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply