• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படத்தின் இறுதி காட்சிவரை மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது - திரு.மாணிக்கம் படத்தை பாராட்டிய ஆர்யா

சினிமா

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் ஆர்யா படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் " சிறந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் நந்தா பெரியசாமி. படத்தில் அமைந்துள்ள எமோஷன்,நடித்த நடிகர்கள், வசனங்கள் என அனைத்தும் எனக்கு மிக பிடித்து இருந்தது. திரைப்படம் இறுதி வரை படத்தில் மிகவும் எமொஷ்னல் காட்சிகள் இருந்தது. திரைக்கதை அமைந்த விதமும் சிறப்பு. சமுத்திரகனி சாரின் நடிப்பு அபாரம். திரு. மாணிக்கம் என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்." என கூறியுள்ளார். நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஒரு கல்லூரியின் கதை என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply