• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்காப்ரோவில் இடம் பெற்ற தீ விபத்தில் ஒருவர் பலி

கனடா

கனடாவின ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வீடு ஒன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வயோதிப ஆண் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த வீட்டில் இருந்த மற்றுமொரு பெண் கடுமையான தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

80 வயதான ஆண் உயிர் இழந்து விட்டதாகவும் 79 வயதான பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நத்தார் கொண்டாட்டங்களுக்காக வீட்டுக்கு விருந்தினராக சென்று இருந்தவரை இவ்வாறு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 
 

Leave a Reply