அட்லீ தயாரித்துள்ள பேபி ஜான் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்
சினிமா
அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை காளீஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
திரைப்படத்தின் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பாடலான பீஸ்ட் மோட் பாடல் இன்று வெளியானது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புள்ளது.
இந்நிலையில் திரைப்படம் வெற்றி பெற நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் படக்குழு அனைவருக்கு வாழ்த்து தெரிவித்து திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.






















