• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து

இலங்கை

வட மாகாணத்தின் சில மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசி இன்று ஏற்றப்பட்டுள்ளது

இதன் போது பிரதேச சபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் நோய்க்கான விழிப்புணர்வு செயலமர்வும் இடம்பெற்றதுடன் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசியும் ஏற்றப்பட்டது.

இந்த விழிப்புணர்வு செயலமர்வினை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் நடத்தி வைத்ததுடன், பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்திருந்தனர்.
 

Leave a Reply