• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மௌனம்... பொறுமை... நம்பிக்கை - திரிஷா பதிவிட்ட வைரல் புகைப்படம்

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் தற்பொழுது அஜித் நடிக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசன் அண்மையில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படப்பிடிப்பின் போது அஜித்துடன் எடுக்கப்பட்ட திரைப்படம் இணையத்தில் வைரலானது.

சமீபத்தில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் நடிகை திரிஷா கலந்துக் கொண்டார். இந்நிலையில் திரிஷா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் மிகவும் வெள்ளை நிற ஆடையில் மிக அழகாகவும் சாந்தமாகவும் காட்சி அளிக்கிறார். அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

திரிஷா தக் லைஃப், ஐடெண்ட்டிடி, சூர்யா 45, ராம் போன்ற திரைப்படங்களும் லைன் அப்பில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply