விடாமுயற்சி படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்
சினிமா
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.
படத்தின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். கடந்த மாதம் யாரும் எதிர்பாராத நேரத்தில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
சமீபத்தில் அஜித் மற்றும் திரிஷா இணைந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜே ரம்யா நடித்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.























