• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாத்தறை – கதிர்காமம் வீதியில் விபத்து-நால்வர் காயம்

இலங்கை

மாத்தறை – கதிர்காமம் வீதியில் தங்காலை உனகுருவ பிரதேசத்தில் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்லது

அம்பாறை, வாடினாகலை பிரதேசத்தில் இருந்து தென் மாகாணத்தில் சுற்றுலா செல்வதற்காக முன்பள்ளி பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்துதே விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதியதில் தாய், தந்தை, மகன் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply