• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பம்

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று காலை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்

அதன்படி அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களால்.இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவின் பெயர் ஒகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply