இறப்பு - 06 JUN 2024
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தபூஷணி சிவகுமாரவேலு அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினத்துரை சிவசேகரம், நந்தவதி தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற வைத்தியர் வேலும்மயிலும் சிவகுமாரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
நாகநந்தினி, குமரேசன் ஆகியோரின் ஆசைத் தாயாரும்,
நாகேஸ்வரன் மயூரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சின்மயி, கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற இரத்தினபாலேந்திரன், அருணாதேவி(வசந்தா), காலஞ்சென்ற சிவகரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சத்யதேவி, சரவணபவன் ஆகியோரின் மைத்துனியும்,
பவதக்ஷினி, குமரன், ஷிவாந்தி ஆகியோரின் மூத்த மாமியும்,
அபர்ணா, சாம்பவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
மதுரஹன், தேஜஸ், சாம்பவி, லவன், சுமுகன் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12 :00 மணிவரை லண்டன் கோல்டர்ஸ் கிரீன் மயானத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 12:45 மணிவரை பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தினி/குமரேசன் - மகள், மகன்
Mobile : +447876177416