TamilsGuide

திரு. கதிர் பாலசுந்தரம்

இறைபதம் அடைந்தார்

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பொற்கால ஓய்வுநிலை அதிபர், ஆங்கில ஆசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் , இலக்கியவாளர் திரு. கதிர் பாலசுந்தரம்
அவர்கள், இன்று 01/06/2024 சனிக்கிழமை, கனடாவில் இறைபதம் அடைந்தார்.
யூனியன் கல்லூரியில் புதிய சகாப்தம் படைத்து பல்லாயிரம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தன்னலமற்ற சேவையை வழங்கி, ஓய்வு பெற்ற பின்னரும் யூனியன் கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் எமது அதிபர். கனவிலும் நனவிலும் யூனியன் கல்லூரியையே சிந்தித்த, தனது சேவைக்காக த்தில் தனது நிர்வாகத்திறமை, கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுடன் பாடசாலையை நிர்வகித்து பலநூறு மாணவர்கள் பல்கலைகழக நுழைவுத் தேர்வில் மிகச்சிறந்த பெறுபேறுகள் பெற வைத்து எல்லோரையும் வியப்புடன் யூனியன் கல்லூரியை திரும்பிப் பார்க்க வைத்த நல்லாசான் அமரர் பொற்கால அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்கள்.

யாழ். ஆவரங்கால்
சிவன் வீதியை பிறப்பிடமாகவும்
வீமன்காமம், கொழும்பு, புறூணை(Brunei), லண்டன் மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பொற்கால ஓய்வுநிலை அதிபர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் , இலக்கியவாளர் திரு. கதிர் பாலசுந்தரம்
அவர்கள், இன்று 01/06/2024 சனிக்கிழமை, கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கதிர்காமர் வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும்
Dr.கயல்விழி(கீதா), யாழ்கோவன்(தீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உசிலானந்தன், சந்திமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.யவ்வனா, மிதுசனா (ஆசிரியர்), Dr.ருக்சன், லூக் (உதவி அதிபர்) ஆகியோரின் பாசமிகு பேரனும்.
காலஞ்சென்ற சின்னத்துரை (தமிழரசு), தர்மலிங்கம், இராசலிங்கம் மற்றும் செல்வபாக்கியம், பரமேஸ், பூமணி ஆகியோரின் அன்புச்சகோதரருமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு,
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை யூனியன் கல்லூரி சமூகம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு.
மகன்: தீபன்(கனடா) +1 (416) 270-4303
 

Leave a comment

Comment