TamilsGuide

தென் கொரியாவில் கோர விபத்து – இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்தில், லொறியில் நீட்டிக்கொண்டிருந்த பொருட்கள் மோதியதில் இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 

ஹ்வாசோங் (Hwaseong) பகுதியில் நேற்று (27) இரவு 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தொழில் முடிந்து தங்குமிடத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த 30 வயதுடைய இரு இலங்கையர்கள், வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, 7.5 தொன் எடையுடைய லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட மரத்தினாலான வீட்டின் கூரையின் பாகம் அவர்கள் மீது மோதியுள்ளது.

இதன்போது தலையிலும் வயிற்றுப் பகுதியிலும் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் லொறியின் 50 வயதுடைய சாரதியை தென் கொரிய பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

விபத்து இடம்பெற்றபோது சாரதி மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பாவனையிலோ இருக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியின் டேஷ்கெம் (Dashcam) காணொளிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து, விபத்துக்கான துல்லியமான காரணம் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment