TamilsGuide

துறைமுக அணுகல் மேல் மட்ட அதிவேக நெடுஞ்சாலை பயன்பாட்டில் மாற்றம் – RDA அறிவிப்பு

துறைமுக அணுகல் மேல் மட்ட அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த அதிவேக நெடுஞ்சாலை வழியாகத் துறைமுக நுழைவாயில் வீதிக்குள் பிரவேசிக்க, துறைமுகத்துக்குள் நுழைவதற்கான உத்தியோகபூர்வ அனுமதிப்பத்திரம் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment