TamilsGuide

விஜய் சேதுபதி மிஸ் செய்த மிகப்பெரிய ஹிட் படம்.. இப்போது வருத்தம்

நடிகர் விஜய் சேதுபதி தனது கெரியரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே தனது நடிப்பு திறமையை நிரூபிக்கும் வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் தன் கெரியரில் ஒரே ஒரு படத்தை மிஸ் செய்தது மட்டுமே வருத்தம் என அவர் பேசி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தின் கதையை முதலில் விஜய் சேதுபதியிடம் தான் அவர் கூறி இருந்தாராம்.

நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது கார்த்தி போன் செய்தாராம். நான் அதில் நடிக்க விரும்புகிறேன் என அவர் சொன்னதும் விஜய் சேதுபதி சரி என சொல்லிவிட்டாராம்.

இந்த தகவலை லேட்டஸ்ட் பேட்டியில் விஜய் சேதுபதி தெரிவித்து உள்ளார். 

Leave a comment

Comment