திரு எச் வி . ஹண்டே (இன்று வயது 100)
• பிறப்பு. இவர் 1927-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தார்.
• மருத்துவப் பணி. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர், 1984-ஆம் ஆண்டு சென்னையில் புகழ்பெற்ற 'ஹண்டே மருத்துவமனையை' (Hande Hospital) நிறுவினார்.
அரசியல் பயணம்
• ஆரம்பகால அரசியல். மூதறிஞர் ராஜாஜியின் அரசியல் சீடரான இவர், சுதந்திரா கட்சியின் சார்பில் 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் சென்னை பூங்கா நகர் (Park Town) தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• அமைச்சர் பதவி. பின்னர் அதிமுகவில் இணைந்த இவர், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் 1980 முதல் 1987 வரை தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இந்தியாவின் முதல் எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) பாதிப்பு குறித்த அறிவிப்பை 1986-இல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டவர் இவரே.
------- இவர் சுதந்திரா கட்சியில் இருக்கும்போதே எனக்கு சிறுவயதில் நன்கு தெரியும் . இவர் ராஜாஜியின் உண்மை சீடர் . எம்ஜிஆர் மீது ராஜாஜிக்கு தனி பாசம் உண்டு . காரணம் மதுவிலக்கு கொள்கையில் எம்ஜிஆர் , ராஜாஜி இருவரும் ஓரே கருத்தை கொண்டிருந்தார்கள்
அதாவது எம்ஜிஆர் திமுகவில் இருக்கும்போதே இந்த கொள்கையில் உறுதியாக இருந்தார்
1972 க்கு பிறகு கருணாநிதி ஆட்சியில் மதுக்கடை அதாவது கள்ளுக்கடை திறந்தார் . அதை காமராஜரும் எதிர்த்தார் .
அப்போது கருணாநிதி , காமராஜரை பார்த்து , வெளிநாட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் என்று அபாண்ட பழியை சுமத்தினார் . அன்றைய பத்திரிக்கையில் வெளிவந்ததை சிறுவனாக இருந்த நானே படித்துள்ளேன் . அதை பார்த்த காமராஜர், தன் மீது இன்னும் ஏதும் அபாண்ட பழி அஞ்சாமல் சொல்வார் கருணாநிதி என்று வாயை மூடிக்கொண்டார் காமராஜர் (பாவம் காமராஜர் நல்ல மனுஷன் அல்லவா அவர் )
எம்ஜிஆரிடம் உள்ளவர்கள் எல்லாம் திமுக பிடிக்காமல் அவருடன் 1972 யிலேயே விசுவாசமாக வெளியேறி வந்தவர்கள் என்பதில் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது . 1980 இல் எம்ஜிஆர் பாராளுமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதால் பல முன்னாள் அமைச்சர்களுக்கு திமுகவில் வலைவிரிக்கப்பட்டது .
அந்த நேரத்தில் அதிமுகவில் நல்ல படித்த நபர்கள் தேவைப்பட்டபோது , இதே எச் வி ஹண்டே தனது சுதந்திரா கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் எம்ஜிஆரிடம் வந்து சேர்ந்தார் .
1980 இல் அண்ணா நகரில் கருணாநிதி உடன் எச் வி ஹண்டே அதிமுக சார்பில் போட்டியிட்டார்
மிக குறைந்த வித்தியாசம் 800 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாந்தி வெற்றிபெற்றார் .
உண்மையில் கருணாந்தி தோற்றதுதான் உண்மை என்று இன்று வரை பேசப்படுகிறது காரணம் , தந்து நண்பர் திரு கருணாநிதி அரசியலில் இருக்கவேண்டும் என்றும் எம்ஜிஆர் அவர்களே பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து , கருணாநிதியே ஜெயித்ததது போலவே அறிவிக்கப்பட்டது என்று அப்போது ஒரே பேச்சு .இன்றுவரை அது நீடிக்கிறது ...
1984 இல் எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அப்போது அவரை பார்த்துவர யாரை அனுப்பலாம் என்று பேசபப்ட்டபோது , ஆர் எம் வீரப்பன் அவர்கள் மருத்துவஅமைச்சர் ஹண்டே அவர்களையே பரிந்துரை செய்து அனுப்பினார்
அமெரிக்காவில் இருந்து வந்த ஹண்டே , எம்ஜிஆர் எப்படி இருக்கிறார் ? என நிருபர்கள் கேட்டபோது , எம்ஜிஆர் உடல் நலம் நன்றாக உள்ளார் . சிறிது பேச முயற்சிக்கிறார் என்றும் எல்லோரையும் அடையாளம் கொண்டுகொள்கிறார் என்றும் பேட்டி கொடுத்தார்
மறுநாள் கருணாநிதி , எம்ஜிஆர் செயலாற்ற மனிதராக மருத்துவமனையில் வெறுமனே வைத்துள்ளனர் . "ஹண்டே புளுகு அண்டப்புளுகு" என்று அபாண்டமாக சொன்னார் .
அடுத்து , நடிகர் பாக்கியராஜ் அவர்கள் சென்று பார்க்கப்போனார் . அவர் திரும்பி சென்னை வந்ததும் , எம்ஜிஆர் நன்கு என்னிடம் பேசினார் என்றும் , வாசல்வரை என்னை வந்து வழியனுப்பினார் என்றும் பேட்டி அளித்தார் ..
அப்போதும் கருணாநிதி , (நக்கலாக ) இது "முருங்கைக்காய் நடிகர்" பேச்சுக்கெல்லாம் ஆதாரமே இல்லை என்றார் .
மறுநாள் திரு பாக்கியராஜ் , வேண்டுமானால் எம்ஜிஆர் உடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் காண்பிக்கட்டுமா ? என்றாரே பார்க்கலாம் .
அத்தோடு கருணாந்தி கப் - சிப் ஆனது வரலாறு ...!
Abdul Salam


