TamilsGuide

உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்த நேரம் அது..

மறைந்த கலைவாணரின் மகள் என்.எஸ்.கே.கஸ்துரி அவர்களின் திருமணத்தை புரட்சித்தலைவர் அவர்கள், கலைவாணர் அரங்கில்...
அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் 1970-ஆம் ஆண்டு நடத்திவைத்தார்.
அந்த விழாவிற்கு 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் நடித்த 3 நாயகிகளும் வந்திருந்தனர்..
விழா அரங்குக்கு வந்த அந்த மூவரும், முதல்வர் மனைவி திருமதி.தயாளு அம்மா அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலிக்கு முன்னால் தங்களுக்கும் நாற்காலி போடச்சொல்லி அமர்ந்தனர்..
இதை மேடையிலிருந்த கவனித்த 'மக்கள் திலகம்' உடனே மேடையிலிருந்து இறங்கி வந்து, அந்த மூவரையும் பின்வரிசையில் அமரச்சொல்லிவிட்டுதான் மேடைக்கு சென்றாராம்... பண்பின் பிறப்பிடம்.. நம் மக்கள்திலகம்..
படம்: மண மக்களை வாழ்த்தி பேசும் மக்கள்திலகம்.. 
பா.வே. முத்தமிழன்
-- 
 

Leave a comment

Comment