___________________
#பெருவாரியான மக்களுக்கு போக்குவரத்து, பொருளாதார, தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத 1970களின் இறுதி, 1980களின் தொடக்க காலத்தை மனக்கண் முன்னால் கொண்டு வந்து இந்த பெரிய பதிவை படிக்கத் தொடங்குக.
___________________
#எம்ஜிஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன் பதினொன்றாம் வகுப்பு SSLC என்று இருந்தது. அதற்கு பிறகு PUC என்கிற புகுமுக கல்லுரிக் கல்வி. இதை நகரத்தில்தான் சென்று படிக்க வேண்டும்.
#SSLC மிகப் பெரிய கல்வித் தகுதியாக கருதப்பட்ட காலம் எம்ஜிஆர் ஆட்சிக்கு முன்பு வரை இருந்தது. அந்தந்த கிராமங்களில் SSLC வரைதான் கல்வி.
#அதற்கு பிறகு நகரத்திற்கு சென்று PUC, அதன் பிறகு கல்லூரிக் கல்வி. அதாவது கலைக் கல்லூரி பட்டப் படிப்கை நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். நகரத்தில் விடுதியில் தங்கி, சாப்பாடு, போக்குவரத்து உட்பட இதர செலவுகளை நான்கு ஆண்டுகள் செய்ய வேண்டி இருந்தது.
#எனவே +2 கல்வி முறையை 1978ஆம் ஆண்டு எம்ஜிஆர் கொண்டு வந்தார்.
#அதாவது 10+2+3.
#பத்தாம் வகுப்பு (10) மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+) கல்லூரி (3)
+2 கல்வி முறையை எம்ஜிஆர் கொண்டு வந்து நகரத்தில் படித்த PUC கல்வியை அவரவர் சொந்த கிராமத்தில் கிடைக்க வைத்தார். பெற்றோருக்கு ஓராண்டு கல்வி செலவு குறைந்ததால் கிட்டத்தட்ட அனைவரும் +2 கல்வியை முடித்தனர். ஓராண்டு கல்விச் செலவு குறைந்ததால் அடுத்த மூன்றாண்டு கலை, அறிவியல் பட்டப்படிப்பு கல்வி அல்லது நான்கு ஆண்டுகள் பொறியியல் கல்வி பெற்றோரால் சமாளிக்க முடிந்தது.
#எம்ஜிஆர் ஆட்சி வருவதற்கு முன்பு பெண்களின் கல்வி என்பது அதிகபட்சம் SSLCதான் . SSLC படித்து முடித்தால் உடனே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவது வழக்கமாக இருந்தது.
+2 கல்வி முறையால் உயர் கல்வி எளிதானது.
#மேலும் புதிய கல்வித் திட்டத்தின்படி, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் இரு வகையான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அவை பொதுக்கல்வி (GENERAL STREAM OF EDUCATION), தொழிற்கல்வி (VOCATIONAL STREAM OF EDUCATION.
1978-79-ஆம் கல்வி ஆண்டில் 709 மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் விவசாயம், வணிகம், வியாபாரம், மனையியல், பொறியியல் தொழிற்நுட்பம், சுகாதாரம் என 6 தலைப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.
#எனவே நிறைய மாணவர்கள் +2 முடித்துவிட்டு கல்லூரிக் கல்விக்கு படை எடுத்தார்கள். ஆனால் கல்லூரிகள் போதிய அளவு இல்லை. PUC முடித்து விட்டு ஒரு மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆயிரம் பேர் கல்லூரிக் கல்விக்கு சென்ற நிலை மாறி +2 படித்து விட்டு லட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரிக் கல்விக்கு தயாராக வந்தார்கள்.
#திடீரென்று உயர்ந்த உயர் கல்வித் தேவையை அரசால் மட்டும் சமாளிக்க முடியாத நிலையில் தனியார் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஊக்கமளிக்கப்பட்டது. எனவே சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசுக் கல்லூரி அல்லது தனியார் கல்லூரியில் அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணத்தில் சேர முடிந்தது.
#அப்படி தொடங்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஐம்பது சதவீதம் அரசு ஒதுக்கீடு என்று நிபந்தனை விதித்தார் எம்ஜிஆர்.
#1976ஆம் ஆண்டிற்கு முன் தொழில் நுட்பக் கல்வித்துறையின் கீழ் 7 பொறியியல் கல்லூரிகளும், 38 பாலிடெக்னிக்குகளும் மட்டுமே இருந்து வந்தன.
#எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் புதிதாக பொறியியல் கல்லூரிகளும், பாலிடெக்னிக்களும் தொடங்கப்பட்டதன் காரணமாக தொழில்நுட்பக் கல்வித்துறையின் கீழ் 31 பொறியியல் கல்லூரிகளாகவும், 133 பாலிடெக்னிக்களாகவும் உயர்ந்தன.
#1976ஆம் ஆண்டு 1,426 ஆக இருந்த பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை எண்ணிக்கை எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் 6,067 ஆக அதிகரித்தது.
#அதே போல 4,890ஆக இருந்த பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை எம்ஜிஆர் காலத்தில் 23,150ஆக அதிகரித்தது.
#மகளிர்க்கான அரசினர் பாலிடெக்னிக்குகள் 1976ஆம் ஆண்டு வரை 3 மட்டுமே 420 மாணவியருடன் செயல்பட்டு வந்தன. எனவே அனைத்து ஆண்கள் பாலிடெக்னிகளிலும் மாணவியரை சேர்த்துக் கொள்ள ஆணை பிறப்பித்தார் எம்ஜிஆர்.
#உயர் கல்வி வளர்ச்சி உச்சத்தை தொட்டது.
#அவ்வாறு 1980களின் ஆரம்பத்தில் உயர் கல்வி திடீரென உச்சம் பெற்ற நிலையில் அன்று எளிதில் உயர் கல்வியை படித்த மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல நல்ல வேலைகளில் சேர்ந்து சம்பாதித்து பொருளாதார தன்னிறைவு அடைந்து அதன் காரணமாக தங்கள் பிள்ளைகளையும் உயர் கல்வியை எளிதில் படிக்க வைத்து தானும் உயர்ந்து தங்கள் வம்சத்தையும் உயர்த்தினார்கள்.
#1980களில் +2 முடித்து உயர் கல்வியை எளிதில் அடைந்தவர்கள் இன்று 60+ வயதுகளில் இருக்கிறார்கள்.
#அவர்களின் மூன்றாம் தலைமுறையும் அந்த +2 கல்வி மற்றும் எளிதில் கிடைத்த உயர் கல்வியின் பயனால் இன்று உலகெங்கும் பரவி உயர்ந்து நிற்கிறார்கள். இதற்கு முழுக் காரணம் எம்ஜிஆர். மட்டுமே.
#உயர் கல்வி வளர்ச்சிக்கு அஸ்திவாரம் அமைத்து வளர்த்தது எம்ஜிஆர்தான்.
#இன்று தமிழகத்தில் வளர்ச்சி அடைந்த, பொருளாதார தன்னிறைவு பெற்ற லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன என்றால் அது அதிமுகவின் சாதனை. எம்ஜிஆர் அமைத்த அடித்தளம். ஒட்டுமொத்த சமுதாயத்தையே தனது உயர் கல்வி புரட்சியால் உயர்த்தி தன்னிறைவு அடையச் செய்தவர் எம்ஜிஆர்.
#காமராஜர் ஆரம்பக் கல்வியின் தந்தை என்றால் எம்ஜிஆர் உயர்கல்வியின் தந்தை.
#மருதம்
- பிரசாந்த்!


