TamilsGuide

ஆர்யா நடிக்கும் ஹலோ காதல் படத்தின் துள்ளலான மஜா மஜா பாடல் வெளியானது

நடிகர் ஆர்யா, நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்திலிருந்து, ரசிகர்களைத் துள்ளாட்டம் போட வைக்கும் ‘மஜா மஜா’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூசிக் யூடியூப் தளத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இளைஞர்களைக் கவரும் வகையிலான வேகமான ராப் மற்றும் பார்ட்டி இசையுடன் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது

இப்பாடலுக்கு பிரபல மலையாள நடிகரும் ராப் பாடகருமான நீரஜ் மாதவ் இப்பாடலுக்கு இசையமைத்திருப்பதுடன், செம்வி உடன் இணைந்து பாடியுள்ளார். அர்காடோ கூடுதல் இசை மற்றும் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

நீரஜ் மாதவ் மற்றும் பாடலாசிரியர் விஷ்ணு எடவன் ஆகியோர் இணைந்து துள்ளலான வரிகளை எழுதியுள்ளனர். "ஏ மஜா மஜா ஒன் அண்ட் ஒன்லி ராஜா ராஜா... ஸ்ட்ரெஸ் வேணாம்" எனத் தொடங்கும் வரிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பிரபல நடன இயக்குநர் ஷெரிஃப் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் சில்வர் கிரெய்ன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சுனு ஏ.வி. மற்றும் ஜோதிஷ் எம். எழுதியுள்ள இப்படத்திற்கு, இயக்குநர் ஹலிதா ஷமீம் கூடுதல் திரைக்கதை மற்றும் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்.

ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்ய, பினு நெப்போலியன் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 4 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


 

Leave a comment

Comment