TamilsGuide

பண்டிகைக் கால உணவுக் கொள்வனவின்போது அவதானமாகச் செயற்படுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளிரூட்டப்பட்ட மீன் மற்றும் இறைச்சி வகைகளைக் கொள்வனவு செய்யும்போது விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். 

பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது அவற்றின் காலாவதியாகும் திகதி மற்றும் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும் உபுல் ரோஹண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் உணவு விற்பனை நிலையங்களைப் பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் உபுல் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment