TamilsGuide

என்விடியா நிறுவனத்தின் சி.இ.ஒ மற்றும் இயக்குநராக ஹென்சன் ஹீவாங் மீண்டும் நியமனம் 

என்விடியா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் அந்நிறுவனத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக குழு மீண்டும் நியமனம் செய்துள்ளது.

ஜென்சன் ஹுவாங்குடன் நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அவரது வெளிப்படைத்தன்மை மற்றும் நிறுவனத்தை வழிநடத்தும் திறனில் திருப்தி அடைந்த இயக்குநர் குழு, அவரை மீண்டும் நியமிக்க ஒருமனதாக நியமிக்க முடிவெடித்து இந்த அறிவிப்பை என்விடியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜென்சன் ஹுவாங் தனது நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மற்றும் சீனப் பெண் தொழிலதிபர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இது நிறுவனத்தின் நடத்தை விதிகளுக்கு எதிரானது எனக் கருதப்பட்டதை எதிர்த்து தலைமைச் செயல் அதிகாரி பதிவியிலிருந்து விலகினார்.

ஜென்சன் ஹுவாங்குடன் தொடர்பிலிருந்த ஆலிஸ் ஹுவாங் என்ற சீனப் பெண், சீனாவுக்காக உளவு பார்த்திருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகித்தது. இது குறித்து அமெரிக்க நீதித்துறை மற்றும் நாடாளுமன்றக் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின.

சர்ச்சைகள் மற்றும் விசாரணைகள் தீவிரமடைந்த நிலையில், அவர் சி.இ.ஒ தலைவர் மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகினார். இடைக்கால சி.இ.ஒ-வாக நிறுவனத்தின் நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் நியமிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பால் என்விடியா பங்குகள் சரிந்து நிறுவனத்தின் சந்தை மதிப்பில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் அந்தப் பொறுப்புக்குத் திரும்புவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தார்.

பதவி விலகிய ஜென்சன் ஹுவாங்கிற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் பணியாற்ற இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது 
 

Leave a comment

Comment