TamilsGuide

எம்.ஜி.ஆர். ஒரு ஜெண்டில்மேன்! நடிகை பானுமதி நெகிழ்ச்சி

யூடியூபில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வரும் நடிகை பானுமதியின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
”எம்.ஜி.ஆருடன் இணைந்து, தாய்க்குப்பின் தாரம், மலைக்கள்ளன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், நாடோடி மன்னன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறேன்.
படப்பிடிப்புத் தளத்தில் என்னை அவ்வளவு மதிப்புடன் நடத்துவார்.
படப்பிடிப்புத் தளத்திலேயே என்னைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது “பானுமதி அம்மா“ என்று தான் குறிப்பிடுவார். 
அவர் முதலமைச்சாரானதும் ஒரு விழாவில் என்னைப் பற்றி குறிப்பிட்டு மிகவும் உயர்வாகப் பேசினார்.
பொதுவாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற யாரும் மற்றவர்களை இந்தளவுக்கு உயர்த்திப் பேச மாட்டார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் பேசியிருக்கிறார்.

பழகும் விஷயத்தில் அவர் ஒரு ஜெண்டில்மேன்.
பிறருக்கு உதவுவதிலும் சரி, பிறரை பண்போடு நடத்துவதிலும் சரி அவருக்கு நிகர் அவர் தான்” என்று தன்னுடைய பலதரப்பட்ட  அனுபவங்களை விவரித்திருக்கிறார் பழம்பெரும் நடிகையான பானுமதி.

 

Leave a comment

Comment