TamilsGuide

சரோஜாதேவின் திருமணம்....

ஏராளமான வரன்களை அலசி ஆராய்ந்து கடைசியில், ஜெர்மனியில் படித்த இன்ஜினியர் ஸ்ரீஹர்ஷாவை சரோவுக்கு மணமகனாக ருத்ரம்மா தேர்ந்தெடுத்தார்.
பி.கே. ஸ்ரீஹர்ஷா பெங்களூரு பெல் நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயது வாலிபர். ஏறக்குறைய சரோவும் அவரும் ஒரே ஆண்டில் 1938ல் பிறந்திருக்கக் கூடும்.
ரோஜா மலரின் வடிவத்தில் தனது திருமண அழைப்பிதழைப் புதுமையாக அமைத்திருந்தார் சரோ.
பிப்ரவரி 28 காலையில் கவுரி பூஜை கோலாகலமாக நடந்தது. மாலையில் தனது நிச்சயதாம்பூலப் பரிசாக ஆயிரம் ரூபாயில் பட்டுப்புடைவையையும் தங்க வளையல்களையும் ஈடு கட்டினார் ஹர்ஷா.
மாப்பிள்ளை அளித்த பட்டுச்சேலையை அணிந்து வந்து அனைவரிடமும் ஆசி பெற்றார் சரோ.
ருத்ரம்மா தேர்ந்தெடுத்த முகூர்த்த நாள் 1967 மார்ச் முதல் தேதி.
அன்று தமிழகத்தில் கூடுதல் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. காரணம் அண்ணாவின் தலைமையிலான ஆட்சி மாற்றம்!
முற்பகல் பதினோரு மணி.
சரோஜாதேவியின் திருமணம் விமரிசையாக பெங்களுர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது."
சரோவின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்து, தங்களின் இதய தேவதை இல்லறம் புகும் காட்சியைக் கண் குளிரக் கண்டார்கள்.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டுக் கச்சேரி சரோ கல்யாணத்தின் சிறப்பம்சம்!
உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானி, பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சரோவுக்குக் கல்யாணப்பரிசாக பகவத் கீதை நூலைப் பரிசாக அனுப்பி இருந்தார்.
‘தம்பதி சமேதராகத் தன்னை வந்து தவறாமல் சந்திக்கவும் வாழ்த்து மடலில் மறக்காமல் குறிப்பிட்டார்.
மார்ச் 5ஆம் தேதி மயிலாப்பூர் 

நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏ.எல்.எஸ். என்று அழைக்கப்பட்ட 
ஏ.எல். ஸ்ரீனிவாசன், அகில இந்திய அளவில் அநேக முறை சினிமா வர்த்தக சபையின் தலைவராகப் பதவி வகித்தவர்.
1954 முதல் ஏ.எல். எஸ். மறைந்த 1974 வரை தமிழ்த் திரையுலகம் அவரது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. இன்று அந்த அடையாளங்களைச் சொன்னால் உங்களுக்குத் தெரியாது.
கவிஞர் கண்ணதாசனின் உடன் பிறந்த அண்ணன் ஏ.எல்.எஸ். என்றால் சட்டென்று புரியும்" 

 

Prashantha Kumar

Leave a comment

Comment