ஹூதி தாக்குதலில் சவூதி அரேபியா ரியாத்தில் அமைந்துள்ள மிக உயரமான கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கட்டடத்தின் பல மாடிகளில் உள்ள ஜன்னல்கள் வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியாவின் இறையாண்மைச் செல்வ நிதியத்தின் (Sovereign Wealth Fund) தலைமையகமும் இந்தக் கட்டடத்திலேயே அமைந்துள்ளது.
இதேவேளை, யேமனைச் சேர்ந்த ஹூதி போராளிகள் அண்மைக்காலமாக நடத்தும் புதிய தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


