திரு. ஆர் .என் .லோகேந்திரலிங்கம் அவர்களை ஆசிரியராக கொண்ட " உதயன் " , திரு. எஸ் .திருச்செல்வம் அவர்களை ஆசிரியராக கொண்ட ' தமிழர் தகவல் " , திரு .ரி.கே.பரமேஸ்வரன் அவர்களை ஆசிரியராக கொண்ட ஈழநாடு , திரு. எஸ்.சிவமோகன் அவர்களை ஆசிரியராக கொண்ட " தளிர் ' திரு. சார்ள்ஸ் தேவசகாயம் அவர்களை ஆசிரியராக கொண்ட " தமிழ் மிரர் " ஆகிய ரொரன்டோவை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் ஊடகங்கள் செந்தியின் " தமிழன் வழிகாட்டி " வழங்கி வரும் பணியினை பாராட்டி விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளனர் . கனடிய மண்ணில் அனைத்து தமிழ் ஊடகங்களோடும் சேர்ந்து பயணிக்கும் ஒரே ஒரு நிறுவனம் செந்தியின் " தமிழன் வழிகாட்டி " என்பது அனைவராலும் அறியப்பட்டதொன்று எனலாம் . கனடிய தமிழ் ஊடகங்கள் கனடிய தமிழரின் பலம். கனடிய தமிழ் ஊடகங்களின் வெற்றியின் வளர்ச்சியில் செந்தியின் " தமிழன் வழிகாட்டி " தொடர்ந்து சேர்ந்தே பயணிக்கும் .
என்றும் நன்றியுடன்
" தமிழன் வழிகாட்டி " செந்தி


