ஜெயிலர் 2 வெற்றி... நண்பருக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன் - உடனே நெல்சன் தந்த பதில்
சினிமா
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாள் காட்சிகளிலேயே ரசிகர்களின் உற்சாகமும் கொண்டாட்டமும் திரையரங்குகளில் களைகட்டியுள்ளது.
மேலும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்த நடிகர்கள், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் உள்ளிட்ட திரைபிரபலங்கள் திரையரங்குகிற்கு வருகை வந்து படத்தை கண்டு களித்தனர். படத்தை பார்த்த திரைபிரபலங்கள் பலரும் ‘ஜெயிலர் 2’ படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ‘ஜெயிலர் 2’ படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் ‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றிக்காக அப்படக்குழுவினருக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
இதனிடையே, நடிகர் கமல்ஹாசனின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் நெல்சன் . "உங்கள் பாராட்டுக்கு நன்றி, கமல்ஹாசன் சார். உங்களைப் போன்ற ஒரு ஜாம்பவானிடமிருந்து இத்தகைய பாராட்டைப் பெறுவது எங்களுக்குப் பெரும் கௌரவம்" என தெரிவித்துள்ளார்.






















