• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் புதிதாக திறக்கப்பட உள்ள நான்கு மதுபானசாலைகள்! அனுமதியை ரத்துச் செய்யக் கோரி போராட்டம்

இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு கோரி, கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது இன்று (15.10.2026) வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது.

புதிதாக அனுமதியளிக்கப்பட்ட மதுபானசாலைகளுக்கு எதிராகப் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், மதுவொழிப்புக்கான அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக மதுபானசாலைகளைத் திறப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை ரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 

Leave a Reply