• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சத்தியவான் சாவித்திரி படத்தின் டீசர் வெளியானது

சினிமா

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சத்தியவான் சாவித்திரி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார்.

இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், ஹார்ட் பீட் புகழ் சாருகேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நவ.20ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 
 

Leave a Reply