ட்ரம்பை கணவர் என உளறிக் கொட்டிய வெள்ளை மாளிகை ஊடகச் செயலர்
White House's new press secretary accidentally refers to Trump as her spouse: வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர், ட்ரம்பை தவறுதலாக தன் கணவர் என்று கூறியதால் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலராக, கேற்றி ஸக்கரியா என்னும் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை கேற்றி தனது முதல் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். கேற்றிக்கு நான்கு பிள்ளைகள்.
ஊடகவியலாளர் ஒருவர், நான்கு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு வேலையையும் வீட்டையும் எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு கேற்றி, அதற்குத்தான் என் ஜனாதிபதி இருக்கிறாரே, அவர் பார்த்துக்கொள்வார் என்று கூறிவிட்டார்.
அதாவது, என் கணவர் இருக்கிறார், அவர் பிள்ளைகளை கவனித்துக்கொள்வார் என்று கூறுவதற்கு பதிலாக, ஜனாதிபதி இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என தவறுதலாகக் கூறிவிட்டார்.
பின்னர், சிரித்து அதை சமாளிக்க முயன்றார். என்றாலும், தனது முதல் ஊடகவியலாளர் சந்திப்பை வெறும் 14 நிமிடங்களிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் கேற்றி
பின்னர் பேசிய ட்ரம்ப், கேற்றி ஊடகவியலாளர் சந்திப்பை நன்றாக செய்தார் என்று நினைக்கிறேன் என்று கூறிவிட்டு, அவரும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
கேற்றியின் முதல் சந்திப்பிலேயே அவர் உளறிக்கொட்ட, சில ஊடகங்கள் அதை கடுமையாக விமர்சித்துள்ளன.






















