ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்
இலங்கை
அஸ்வெசும (Aswesuma) நலத்திட்ட உதவிகளுக்கான 2.04 பில்லியன் ரூபாயை, தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் அரசாங்கம் நாளை (14) வைப்பிலிடவுள்ளது.
மொத்தம் 2,041,711,250 ரூபாய் தொகை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.
பயனாளிகள் இத்தொகையை நாளையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கிடையில், முதல் கட்டத்தின் கீழ் 985,283 பயனாளி குடும்பங்களுக்கான 2026 ஒக்டோபர் மாதத்திற்கான அஸ்வெசும நலத்திட்ட உதவித் தொகைக்காக 9,123,802,500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் ஒக்டோபர் 14 முதல் தங்கள் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் வாயிலாக இத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.





















