• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பனாமாவில் 6.0 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பனாமாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்நது அப்பகுதியில் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் தொடர்ச்சியாக கடற்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

​ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவலின்படி 6.0 ரிக்டர் அளவில் பனாமா கடலோரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 35 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக ​கடந்த வெள்ளிக்கிழமை பனாமாவின் ஹெர்ரேரா மாகாணத்தில் உள்ள பிடலோசா அர்ரிபா பகுதிக்கு தென்மேற்கே 10 கி.மீ. தொலைவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நேரம் கழித்து மீண்டும் 6.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது

இதில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 900 வீடுகள் சேதமடைந்தன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு 300 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்நிலையில் அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.
 

Leave a Reply