ஜெயிலர் 2 - உலகளாவிய முன்பதிவில் ரூ.30 கோடி வசூலை நெருங்கியது
சினிமா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,நெல்சன் திலீப்குமார் இயகத்தில் திரைக்கு வர இருக்கும் படம் ஜெயிலர்2. படத்தின் டிரைலர் வெளியான நாள் முதல் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. வரும் அக்டோபர் 15 உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய முன்பதிவு விற்பனை ரூ. 30 கோடி மொத்த வசூலை நெருங்கியுள்ளது
ரஜினிகாந்தின் ' ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முக்கிய சந்தைகளில் முன்பதிவுகளுக்கு வலுவான வரவேற்பு கிடைத்துள்ளது. நெல்சன் திலிப்குமார் இயக்கிய இந்தப் படம், மூன்று காட்சிகளிலும் முன்பதிவிலேயே உலகளவில் முன்பதிவு ரூ 30 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
மேலும் இந்திய அளவில் ரூ. 16 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் பெரும்பாலான முன்பதிவுகள் முதல் நாளிலேயே நடந்துள்ளன.
மாநில வாரியான முன்பதிவுப் பட்டியலில் தமிழ்நாடு ரூ. 6.47 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கேரளா ரூ. 2.65 கோடியுடனும், கர்நாடகா ரூ. 1.25 கோடியுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை ரூ. 3.29 கோடி பங்களித்து முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பெங்களூரு ரூ. 1.21 கோடியுடனும், கோயம்புத்தூர் ரூ. 59.99 லட்சத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. முதல் நாள் வசூலில் கிட்டத்தட்ட 30 சதவீதம் சென்னையின் பங்களிப்பாகும்.
மேலும் வர்த்தக வலைத்தளமான சாக்னில்க்கின் சமீபத்திய முன்பதிவு கணிப்பின் படி, ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய முன்பதிவு விற்பனை ரூ. 30 கோடி மொத்த வசூலை நெருங்கியுள்ளதாகவும் இதில் வெளிநாட்டு முன்பதிவுகள் மட்டும் ரூ. 20 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போது வரை குறைந்த காட்சிகளே தொடங்கியுள்ள நிலையில், இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் கடைசி மூன்று திரைப்படங்களை ஓப்பிடும்போது ஜெயிலர் 2 இன்னும் முன்பதிவுகளை அதிகரிக்க வேண்டும்.ரஜினிகாந்தின் சமீபத்திய மூன்று படங்களில், 'கூலி' ரூ. 37.20 கோடியுடன் முன்பதிவு விற்பனையில் முதலிடம் பிடித்தது. அதனைத் தொடர்ந்து 'ஜெயிலர்' ரூ. 18.24 கோடியுடனும், இறுதியாக 'வேட்டையன்' ரூ. 15.22 கோடியுடனும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. இந்த நிலையில் கூலியின் வசூல் சாதனையை ஜெயிலர் 2 முறியடிக்குமா என்ற எதிர்ப்பார்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது
முன்பதிவிற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் வசூல் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது























