• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலங்கை

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) கணக்கு தொடர்பான விவகாரத்தில், நிதிக்குற்றங்கள் விசாரணைப் பிரிவினால் (FCID) தான் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் அவர் இந்த முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. 

இதன்போது, ​​நிதிக்குற்றங்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலையாகி, இவ்விவகாரம் தொடர்பான உண்மைகளைத் தெரிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply