மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி? வெளியான தகவல் போலியானது
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் போலியானவை என்று அவரது ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அத்தகைய போலியான செய்திகளால் மஹிந்த ராஜபக்ஷவின் பிம்பத்தை அழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளால் மஹிந்த ராஜபக்ஷ பலவீனமடைந்துவிட்டதாகச் சித்தரிக்க, எதிர்த்தரப்பினர் இத்தகைய பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தைப் பரப்ப முயற்சிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்துப் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்களால் பொதுமக்களும் ஏமாற்றமடைய வேண்டாம்.
மஹிந்த ராஜபக்ஷ தற்போது தனது இல்லத்தில் தங்கியிருப்பதோடு, நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.






















