• Welcome to TamilsGuide
செய்திகள் 1

9 மாதங்களில் 6,865 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் வரவு

இலங்கை

இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில், இலங்கைக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலம் 6,865.4 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பயணவழிகாட்டி

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு 1,053.7 மில்லியன் டொலர் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 734.4 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்திருந்த நிலையில், இவ்வாண்டு செப்டம்பரில் பண வரவு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply