• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நோபல் பரிசை தொடர்ந்து கடலையும் விட்டு வைக்காத ட்ரம்ப்

அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு 'டிரம்ப் பெருங்கடல்' அல்லது 'அமெரிக்காவின் பெருங்கடல்' எனப் பெயர் மாற்றலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலகின் முக்கிய நீர்நிலைகளுக்கு தனது பெயரையோ அல்லது அமெரிக்காவின் பெயரையோ சூட்டும் யோசனையை மீண்டும் முன்வைத்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு நீர்நிலைகளின் பெயர்களை மாற்றுவது குறித்து பேசி வந்த அவர், தற்போது அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு தனது பெயரை வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நாம் ஏற்கனவே மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' என்றும், ஒண்டாரியோ ஏரியை 'அமெரிக்க ஏரி' என்றும் மாற்றியுள்ளோம். இப்போது நமக்கு ஒரு நதியும், ஒரு பெருங்கடலும் தேவைப்படுகிறது. எனது பதவிக்காலம் முடிவதற்குள் ஒரு பெருங்கடலின் பெயரை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.

அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு 'டிரம்ப் பெருங்கடல்' அல்லது 'அமெரிக்காவின் பெருங்கடல்' எனப் பெயர் மாற்றலாம். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.

ட்ரம்பின் இந்த யோசனை கூட்டத்தில் இருந்தவர்களிடையே பெரும் சிரிப்பையும் கைதட்டலையும் ஏற்படுத்திய அதே வேளையில், சமூக ஊடகங்களில் இது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply