வத்தளையில் 18 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் இளைஞர் கைது
இலங்கை
வத்தளை, மலாபே பகுதியில் ‘ஐஸ்’ மற்றும் ஹெராயின் உள்ளிட்ட 18 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரிடமிருந்து 9 கிலோ கிராம் 229 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 9 கிலோ கிராம் 264 கிராம் ஹெரோயின், போதைப்பொருட்களும், தராசு மற்றும் ஒரு கைபேசி ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.






















