TamilsGuide

AI காட்டிய வழியில் சென்று ஆபத்தான மலையில் சிக்கிய சிறுவன் - ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

canada teen rescued from bcs widowmaker guided by claude ai wrong route;கனடாவில், AI காட்டிய வழியில் சென்று மலையில் ஆபத்தான இடத்தில் சிக்கிய 16 வயது சிறுவன் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது மக்கள் தங்கள் அன்றாட வாழ்வின் பல்வேறு முக்கிய விடயங்களை AI செயலிகளிடம் கேட்டு அதன்படி, திட்டமிட்டு முடிவெடுக்கின்றனர்.

AI செயலிகள், பொதுவான தகவல்களை சரியாக வழங்கினாலும், சில நேரங்களில் தவறான தகவல்களை வழங்கி சிக்கல்களை ஏற்படுத்தி விடுவது உண்டு.

அவ்வாறாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள 16 வயது சிறுவன் ஒருவர், காலை சுமார் 8 மணியளவில் கோண்டோலாவில் கிரௌஸ் மலைக்குச் சென்று, கிரவுன் மலைக்கான தனது பயணத்தைத் திட்டமிட உதவுமாறு கிளாட் ஏஐயிடம் கேட்டிருந்தார். 

அந்த இளைஞனை கிரவுன் பாஸ் வழியாகவும், பின்னர் கிரேட்டர் ஸ்லாப்ஸ் மற்றும் கிரவுன் கூலாயர் நோக்கியும் வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.

அது அவன் வழக்கமாக செல்ல வேண்டிய பாதைக்கு மாறாக வேறு ஓரூ ஆபத்தான பாதை வழியே செல்ல வைத்துள்ளது. 

விடோமேக்கர் அரேட்டின் இறுதி செங்குத்துப் பாறையின் அடிவாரத்தை அடையும் முன், அந்த சிறுவன் மேலும் மேலும் கடினமான நிலப்பரப்பின் வழியாகத் தொடர்ந்து சென்றான்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

தான் ஆபத்தில் சிக்கியதை அறிந்த அந்த சிறுவன், உதவி கோரிய பின்னர் நார்த் ஷோர் ரெஸ்க்யூ தேடல் குழு அந்த சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளது.

இந்த மீட்பு பனி குறித்து கருத்து தெரிவித்த நார்த் ஷோர் ரெஸ்க்யூ தேடல் குழு மேலாளர் பால் மார்க்கி, " விழுந்திருந்தால் கடுமையான காயம் அல்லது மரணம் கூட ஏற்பட்டிருக்கும்.

அந்த சிறுவன் செங்குத்துச் சுவருக்கு மிக அருகில் இருந்ததால், அவர்களது ஹெலிகாப்டரால் மேலும் நெருங்கிச் செல்ல முடியவில்லை. எனவே, 2 மீட்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் அவன் இருந்த இடத்திற்கு மேலே உள்ள ஒரு பகுதிக்கு இறக்கப்பட்டனர். 

தரையில் இறங்கியதும், குழுவினர் ஒரு நங்கூரத்தை அமைத்தனர், மேலும் உறுப்பினர்களில் ஒருவர் கயிற்றின் உதவியுடன் அந்த நபருடன் இணைக்கப்பட்டார்.

அங்கு, அந்த உறுப்பினர் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தி, அந்த நபரை ஒரு பொருத்தமான மீட்பு இடத்திற்கு நகர்த்தினார். அந்த சிறுவன் மாலை சுமார் 6:30 மணியளவில் மீட்கப்பட்டார்.

கிளாட் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு இதற்கு முன் சென்றதில்லை. நீங்களே சொந்தமாக ஆய்வு செய்து, அந்தப் பகுதியைப் பற்றிய உங்கள் சொந்த அறிவைப் பெறுங்கள். அதனைப் பயிற்சி மற்றும் வழிசெலுத்தல் மூலம் மேம்படுத்திக்கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.  
 

Leave a comment

Comment