• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இப்போது மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்-ஐஸ்வர்யா லட்சுமி

சினிமா

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரையுலகில் பிசியாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென சமூக வலைதளங்களில் இருந்து விலகினார். அவர் சமூக வலைதளங்களை விட்டு விலகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

“பொதுவாக என் வாழ்க்கை இப்போது இப்படியே இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சமூக வலைதளங்களில் இருந்த காலத்தைவிட, அதிலிருந்து விலகிய பிறகு மனதளவில் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். இப்போது என் வாழ்க்கையில் நான் ஒரு சிறந்த நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன்.

சமூக வலைதளங்களில் இருந்து விலக வேண்டும் என்று நான் முடிவு செய்ய காரணமாக இருந்த சில விஷயங்கள், ஓரளவுக்கு இப்போதும் என் வாழ்க்கையில் இருக்கின்றன. அதனால் அந்த முடிவு எனக்கு சரியானதாகவே தோன்றுகிறது” என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
 

Leave a Reply