• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை

முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான சிரந்தி ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ‘சிறிலியா சவிய’ (Siriliya Saviya) என்ற அமைப்பின் செயல்பாடுகள் சார்ந்தது ஆகும்.

இதற்கிடையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்று (07) காலை அவரது இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ,லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் சிரந்தி ராஜபக்ஷவும் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply