• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் அல்லது அந்நாட்டின் தடைகளுக்கு உள்ளாகியுள்ள நிதித் துறையுடன் தொடர்புகளைப் பேணும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு எதிராக எவ்வித முன்அறிவிப்புமின்றி தடைகளை விதிக்கவும், சிவில் மற்றும் குற்றவியல் தண்டனைகளை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க திறைசேரி திணைக்களம் (US Treasury Department) எச்சரித்துள்ளது.

அமெரிக்க வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்தினால் (OFAC) வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவித்தலின்படி, அமெரிக்க தடைகளை மீறும் வகையில் ஈரானுடன் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு எந்தவொரு கணத்திலும் அமெரிக்க டொலர் நிதி அமைப்பிற்கான (U.S. Dollar Financial System) அணுகலை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஈரானுடன் பேணப்படும் அனைத்து நிதித் தொடர்புகளையும் பரிவர்த்தனைகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறு அமெரிக்க திறைசேரி திணைக்களம் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
 

Leave a Reply