மார்க் கார்னிக்கு நோபல் பரிசு கிடைத்தால்... பேராசிரியர் கூறும் செய்தி
கனடா
Mark Carney for Nobel Peace Prize? கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு நோபல் பரிசு கிடைக்கலாம் என செய்திகள் வெளியாகிவருகின்றன.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் சீரடையுமானால், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், தன்னைத் தவிர வேறு யாருக்கு நோபல் பரிசு கிடைத்தாலும், அது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாது என்கிறார் ரொரன்றோ பல்கலை பேராசிரியரான நெல்சன் வைஸ்மேன் என்பவர்.
அதுவும், மார்க் கார்னிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டால், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடையலாம் என்கிறார் வைஸ்மேன்.
இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 9ஆம் திகதி, அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என நோபல் அறக்கட்டளை முடிவு செய்ய உள்ளது.
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக 287 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 208 தனி நபர்களின் பெயர்களும், 79 அமைப்புகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





















