• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பத்தேகம துப்பாக்கிச் சூடு - மேலும் ஒரு நபர் கைது

இலங்கை

பத்தேகம பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு ஆண் மற்றும் இரு பெண்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர், காலி மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் செப்டம்பர் 27-ஆம் திகதி இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, காலி மாவட்டக் குற்றப்பிரிவு இச்சம்பவம் குறித்த விசாரணையைத் தொடங்கியது.

அதன்படி, நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பாக அம்பலாங்கொடை பகுதியில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கரந்தெனியா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை 48 மணிநேரம் தடுத்து வைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது.

காலி மாவட்டக் குற்றப் பிரிவு இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
 

Leave a Reply